கால்வாயில் மிதந்து வந்த மூன்று சிசுக்களின் உடல் அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் கால்வாய்களில் கர்ப்பப்பையுடன் கூடிய 3 சிசுக்களின் உடல்கள் மிதந்து வந்துள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறைக்கும் சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த சிசுக்களை கைப்பற்றி ஆய்வுக்காக சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து வழக்குப்பதிந்த துவரங்குறிச்சி போலீசார் அப்பகுதியில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment