1465387953-1316திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் மீது ஒருதலைக்காதல் கொண்ட நபர், அப்பெண் தன்னை பற்றி புகார் அளித்த காரணத்தால் அவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவி ராமலட்சுமி. இவர் மீது சின்னராசு என்பவர் ஆசிட் வீசியதால், பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிட் வீச்சு குறித்து ராமலட்சுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள பேபிலட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.

அப்போது பேபி லட்சுமியின் தம்பி சின்னராசு அங்கு அடிக்கடி வருவார். எனக்கும், என்னுடைய கணவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் தகவல் சின்னராசுக்கு தெரிந்ததால் அவர், என்னிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நேரில் சொன்னதோடு, போனிலும் தொந்தரவு கொடுத்தார்.

இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் சின்னராசுவின் அக்கா பேபியிடம் இதுகுறித்து புகார் கூறினேன்.

இதில் ஆத்திரமடைந்த சின்னராசு, கடந்த 7.11.2016 மதியம் 12 மணியளவில் வண்ணாரப்பேட்டை பைபாஸ் சாலை வழியாக நான் நடந்து சென்றபோது, சின்னராசு அங்கு வந்தார். அப்போது என்னுடைய கன்னத்தில் அவர் அடித்தார். இதில் மயங்கி விழுந்தேன். இதன்பிறகு என்னுடைய கழுத்தை நையிலான் கயிறால் சின்னராசு நெரித்தார்.

இதில் எனக்கு திடீரென மயக்கம் தெளிந்தது. அப்போது, சின்னராசு, ”என்ன திமிரு இருந்தால் என்னைப்பற்றி என் அக்காவிடம் சொல்லுவ. நீ இதோடு சாவு” என்று சொல்லியவாறே கயிறால் நெரித்தார் சின்னராசு. அவரது பிடியிலிருந்து தப்ப நான் முயன்றபோது சின்னராசு, ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீர் போன்ற திரவத்தை என்னுடைய முகத்தில் ஊற்றினார்.

அது என்னுடைய முகம், இடது தொடை, வலது கால் ஆகிய இடங்களில் பட்டு காயங்கள் ஏற்பட்டன என்று கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிசார், சின்னராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment