0b73a178a8673e1aab124ac091684c9fதமிழ்நாட்டில் பெண் ஒருவர் தனது கணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் 28 வயது பெண் ஒருவர் நேற்று தூங்கிக் கொண்டிருந்த தனது கணவன் மீது பெட்ரோல் கலந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் உடலில் தீப்பற்றிய கணவர் அலறியுள்ளார்.

இருப்பினும் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவரை அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவனை கொளுத்திய மனைவி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாலே அந்த பெண் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் காதல் விவகாரம் ஏதும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment