Canadian-cashஏடிஎம்மில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவர், தனக்கு பணம் கிடைக்காத காரணத்தால் கணவருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரஜேஸ் என்பவர் தனது மனைவி திவாரியுடன் சேர்ந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, தனது மனைவியை வரிசையில் நிற்க சொல்லிவிட்டு, தான் பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாகவும் அதன்பின்னர் தான் வந்து வரிசையில் நிற்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், திவாரி வரிசையில் நின்றுகொண்டிருந்தபோதே, ஏடிஎம் மையத்தில் பணம் தீர்ந்துவிட்டது. பணம் கிடைக்காத காரணத்தால் தனக்கும் தனது கணவருக்கும் பிரச்சனை ஏற்படும் என பயந்த திவாரி, வீட்டுக்கு சென்று தனது வீட்டின் பால்கனியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.

இருப்பினும், இவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment