Evening-Tamil-News-Paper_28714716435தமிழ்நாட்டில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று காவல் நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ள ரெட்டிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 30).

இவருக்கு அருகிலுள்ள அத்தியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விநோதினி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 22 வயதான விநோதினிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் திலீப் குமார்-வினோதினி இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து விநோதினியின் கணவர் சரவணன் பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சேந்தமங்கலம் பொலிசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் நேற்று முன்தினம், பெரம்பலூர் மாவட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள வினோதினியின் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

இதனையறிந்த பொலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் விடுதியில் அறை எடுத்து கடந்த ஒரு மாத காலமாக தங்கி வந்துள்ளனர்.

விசாரணையின் போதே இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களிடம் பொலிசார் விசாரித்ததில் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விநோதினி உயிரிழந்தார். அதேபோல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் திலீப்குமாரும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்நிலையத்தில் கள்ளக் காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment