625.0.560.350.160.300.053.800.668.160.90_1பெங்களூரில் குடிபோதையில் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொன்ற தந்தை ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் சுப்ரமணியபுரம் பீரீஷ்வரா நகரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சதீஸ் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் சுற்றித் திரிந்ததை பார்த்து சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை பொலிசார் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சதீஸ் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், எனக்கும் எனது மனைவிக்கும் வீட்டில் சிறிய தகராறு ஏற்பட்டது.

எனது மனைவி கேஸ் அடுப்பை அணைக்காமல் வெளியே சென்றதால் நான் இது குறித்து அவரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது நன்றாக குடித்திருந்ததால் அவரை அடித்துவிட்டேன்.

இதனால் என்னிடம் கோபித்துக் கொண்ட எனது மனைவி இரண்டு மகன்களையும் கூட்டிக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் மதுகுடித்த நான் பள்ளிக்கு சென்று எனது இரு மகன்களையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். பின்னர் இருவரையும் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தப்பினேன் என்று கூறியுள்ளார்.

மேலும், மனைவி ஜோதி தன்னை குடியை விடுமாறு கூறியதாகவும், இல்லாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சதீஸை அதிரடியாக கைது செய்துள்ள பொலிசார் தொடரந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment