இந்தியாவில் மனைவி ஒருவர் நோயாளி கணவரை சிகிச்சைக்காக தரையில் இழுத்துச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் அரசு மருத்துவமனையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஸ்ரீநிவாச்சாரி என்ற நோயாளி தனது மனைவியுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடியுள்ளார்.

ஸ்ரீநிவாச்சாரி நடக்க முடியாத நிலையில் அவரை முதல் மாடிக்கு அழைத்துச் செல்ல நிர்வாகத்திடம் மனைவி ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார். நிர்வாகம் ஸ்ட்ரெச்சர் தர அதிரடியாக மறுத்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தனது கணவரை முதல் தளத்திற்கு இழுத்தே சென்றுள்ளார். அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

இந்நிலையில், குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment