625.500.560.350.160.300.053.800.900.160.90தமிழகத்தில் கடனை திருப்பி கேட்ட மூதாட்டியை பெண் ஒருவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரின் பாபநாசம் கீழவீதியை சேர்ந்தவர் கனகராஜ், இவரது மனைவி ராணி.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வரும் கனகராஜ் பேபி என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

கடனை திரும்ப வாங்குவதற்காக பேபி, கடந்த 17ம் திகதி கனகராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு ராணியிடம் பணத்தை கேட்டுள்ளார், இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ராணி பேபியை கீழே பிடித்து தள்ளியதில், பேபிக்கு தலையில் பலத்த காயமடைந்துள்ளது.

பின்னர் ராணி மின்சார வயரால் பேபியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

தொடர்ந்து பேபியின் உடலை ஒரு பெரிய மரப்பெட்டியில் அடைத்துவைத்ததுடன், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

பேபியை காணாத உறவினர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர், சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால் கும்பகோணம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், கனகராஜின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் கனகராஜ்- ராணி முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர், வீட்டிலிருந்தும் துர்நாற்றம் வீசியது, உடனே பொலிசார் சோதனையிட்ட போது பேபியை சடலத்தை கண்டுபிடித்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் இருந்து கனகராஜும், ராணியும் தப்பி ஓடி விட்டனர்.

பேபியின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பொலிசார் தீவிர சோதனை நடத்தி தப்பி ஓடிய கனகராஜ், ராணியை கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரிடமும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment