625.368.560.350.160.300.053.800.560.160.90அனுராதபுரம் செல்லும் யாத்திரீகர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பணம் கேட்டு தொந்தரவு செய்த எட்டு யாசகர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாத்திரீகர்கள் ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த யாசகர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் 55-75 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் பொரலஸ்கமுவ, கடுகஸ்தொட்ட, ரம்புக்கன, இப்பாகமுவ, அஹன்கம, பொரளை, கடவத்தை மற்றும் நொச்சியாகம பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment