625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)இலங்கையின் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் பெறும் 5 நாள் விடுமுறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெற்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள இருந்த ஜனாதிபதி இறுதி நேரத்தில் அதனை இரத்து செய்துள்ளார்.

அத்துடன் அதற்கு அடுத்த நாளான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தனக்கு இருந்த அத்தனை கடமைகளையும் இரத்து செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தினங்களில் ஜனாதிபதி தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், சாதாரண மருத்துவ பரிசோதனைகள் பொருட்டே ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதற்காகவே தனது முக்கிய பயணங்களை ஜனாதிபதி இரத்து செய்திருந்த போதும், கட்சியின் 65ஆவது மாநாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் கலந்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment