625.368.560.350.160.300.053.800.560.160.90 (3)திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதற்கு அழைத்த இளைஞர் ஒருவரை பொல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய தந்தையை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று (28) உத்தரவிட்டார்.

சோமாவதி, மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் எட்டு வயதுடைய மகன் ஒருவனை அப்பிரதேசத்தில் உள்ள பதினெட்டு வயது இளைஞன் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதற்கு அழைத்துள்ளான்.

இதன்போது, குறித்த எட்டு வயது சிறுவன் இந்த விடயத்தை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தந்தை குறித்த இளைஞனை பொல்லால் தாக்கி காயப்படுத்தி உள்ளார். இதனால் தந்தையை சனிக்கிழமை (27) மாலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரை ஞாயிற்றுக்கிழமை(28) மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments

comments, Login your facebook to comment