625.368.560.350.160.300.053.800.560.160.90பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தண்ணீர் கேட்டு வந்தவரால் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று மொனராகலை வெடிகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற போது பின் தொடர்ந்த சந்தேகநபர் சிறுமியை அறைக்கு இழுத்துச்சென்று பலவந்தப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோரிடம் கூறினால் கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளதுடன் மறுநாளும் குறித்த சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு குடி போதையில் மீண்டும் வந்துள்ளார்.

இவ்வாறு வீட்டிற்கு வந்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் முடித்து தருமாறும் அதற்கு தனக்கு தகுதியிருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் ஆச்சரியப்பட்ட பெற்றோர், சுது பாப்பா என்றழைக்கப்படும் குறித்த சந்தேகநபர் கூறிய தகுதி பற்றி மகளிடம் விசாரித்துள்ளனர்.

பெற்றோரின் வலுக்கட்டாயத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதுகுறித்த பெற்றோர் மொனராகலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து சுது பாப்பா என்ற சந்தேகநபர் கைதாகியுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

comments, Login your facebook to comment