625.368.560.350.160.300.053.800.560.160.90623.32 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண சிறைச்சாலை இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் நேற்று நடை பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையிலான செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இதனை தெரிவிக்கையில்,

‘யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிவில் நிர்வாகம் நிலைநாட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த 2001ஆம் ஆண்டில் நான்கு தனியார் வீடுகளில் யாழ்.சிறைச்சாலைத் தொகுதி நிறுவப்பட்டது. எனினும் தேசிய எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யக்கூடிய விதத்தில் அவசியமான அடிப்படை வசதிகள் கூட அவற்றில் காணப்படவில்லை.

இந்நிலையில் சிறைச்சாலைகள் திணைக்களம் வசமுள்ள காணியொன்றில் சுமார் ஆயிரம் கைதிகளை தடுத்துவைக்கக்கூடிய யாழ்.பண்ணை சிறைச்சாலை தொகுதியை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்றுள்ளநிலையில் 130 கைதிகளை தங்கவைப்பதற்கான போதியளவு தங்குமிட வசதிகள் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment