625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)முன்னைய ஆட்சிக்காலத்தில் தெற்கில் பல கோயில்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் உடைக்கப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது இந்த சம்பவங்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கேள்வி :- கிளிநொச்சியில் புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றதே?

பதில் :- அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம். ஆனால் ஒரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவது முன்னைய ஆட்சிக்காலத்தில் தெற்கில் பல கோயில்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் உடைக்கப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால் அப்போது இந்த சம்பவங்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் யாரும் பேசுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை.

கேள்வி :- கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றதே?

பதில் :- தற்போது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் கடந்த காலங்களில் தெற்கில் இந்துக் கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும் தாக்கப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதை குறிப்பிட்டுக் கூறுகிறோம்.

Comments

comments, Login your facebook to comment