625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய நிலையில் இன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இந்நிலையில், இம்முறை உற்சவத்தின் போது மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளாதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்த அதிகளவிலான பக்தர்கள் இம்முறை உற்சவத்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கொடி இறக்கத்துடன் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment