625.368.560.350.160.300.053.800.560.160.90சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா நோக்கி பயணித்த நிலையில், விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது விமானத்தில் இருந்து வெளியே வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி, விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மீண்டும் விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment