625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)பொகவந்தலாவ – ரானிகாடு தோட்டத்தில் 14 வயது மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மாமனாரும் குறித்த மாணவியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும், குறித்த மாணவி பொகவந்தலாவையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி நேற்று காலை 07.45 மணி அளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறி சென்றுள்ளதை மற்றொரு மாணவி பார்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவியின் மாமனார் கண்டி கலகா பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் மாமனாரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments

comments, Login your facebook to comment