625.368.560.350.160.300.053.800.560.160.90சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமாகியுள்ள விமானப்படை வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை ரத்மலானை விமான நிலைய வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும், விமானப்படை வீரரின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் வீதியில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

40 வயதான அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்ப்பட்டுள்ளார்.

இதேவேளை, இவர் ரத்மலானை விமானப் படை முகாமில் கடமையாற்றிய விமானப்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment