625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அமைச்சர் ஒருவருக்கு அவரின் அதிகார வரம்பின் கீழ் உள்ள திணைக்களம் ஒன்று அமைச்சரின் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதற்காக ரூபா 8 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறித்த திணைக்களத்தின் தலைவர் குறித்த அமைச்சரின் நெருங்கிய நண்பர் என ஊழலுக்கு எதிரான குரலின் அமைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்கதெரிவித்துள்ளார்.

குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களில் அதிகமானவர்கள் குறித்த அமைச்சரின் வீட்டிலும் பணிபுரிகின்றனர் என சமரசிங்க குற்றம் சுமத்தியள்ளார்.

பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தும் இந்த அமைச்சரின் பல உண்மைகள் விரைவில் அம்பலமாகும் எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment