625.368.560.350.160.300.053.800.560.160.90சிறுவனை சுடு நீருக்குள் அமுக்கி கொடுமை செய்த மாற்றான் தாயை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியா தோட்ட பகுதியில் நேற்றைய தினம் பெண் ஒருவர் ஏழுவயது சிறுவனை சுடு நீருக்குள் அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுவனின் கைகளையும் முகத்தையும் சுடுநீரில் குறித்த பெண் அமுக்கி எடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் பெற்றோருக்கு இடையில் விவாகரத்து ஏற்பட்டமையினால் அந்த சிறுவன் அவனது தந்தையுடனும், சித்தியுடனும் வாழ்ந்து வந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அச்சிறுவனின் சித்தியால் குறித்த சிறுவன் பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளான் என அயலவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.சம்பவம் தொடர்பிலும் சிறுவனின் சித்தியையும், பாட்டியையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment