625.0.560.320.160.600.053.800.668.160.90புலிகளின் அனைத்து வரலாற்றுச் சின்னங்களும் அழிக்கப்படுகின்றன. ஆனால் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து போர் நினைவாக பல்வேறு நினைவுச்சின்னங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றது.

போர் நடந்தமைக்கான மற்றும், அதன் தாக்கங்கள் வடக்கில் இருக்க கூடாது என புலிகளின் அத்தனை சின்னங்களையும் அழித்தொழிக்கும் அதே அரசாங்கம் தான், விடுதலைப் புலிகளின் அத்தனை சின்னங்களையும் அழித்தது.

இப்பொழுது வடக்கின் பெரும்பகுதிகளில் இராணுவத்தினரின் போர் வெற்றி நினைவுகளும், விகாரைகளும் தான் அதிகமாக முளைத்திருக்கின்றன.

இது எதிர்கால சந்ததியினருக்கு இலங்கையில் சிங்கள, பௌத்த வரலாற்றை காட்டி நிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் தமிழர்களின் போராட்ட வரலாறும், நினைவுச் சின்னங்களும் இல்லாமல், வரலாற்று தடங்கள் இல்லாமலும், அடுத்த சந்ததி எதை பார்த்து தெரிந்து கொள்ளப்போகின்றதோ என்று ஐயம் எழுகிறது.

இந்நிலையில், யாழ். வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் வீடு முற்றாக இடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி வெறும் புற்கள் நிறைந்து காணப்படும் இடமாக காட்சியளிக்கின்றது.

எனினும், விடுதலைப் புலிகளின் தலைவரின் நினைவாக குறித்த காணியில் சேதமடைந்த நிலையில் பெயர்ப் பலகை ஒன்று காணப்படுவதை அவதானிக்க கூடியதாய் உள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

Comments

comments, Login your facebook to comment