625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)பொதுமக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று புதுமாத்தளன் சாலை கடற்கரை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

முன்னொரு காலத்தில் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளனர்.

ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்களை படுகொலை செய்தும் கைது செய்து காணாமல் போகவும் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த காலத்தில் மீனவர் தொழில் செய்வதில் பெரும் பின்னடைவைச் சந்தித்தித்திருந்தனர்.

பொதுமக்கள் சந்தைகளில் அதிக விலை கொடுத்தும் மீன்களை பெற்றுகொள்ள முடியாதிருந்தது.அதனால் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் பொதுமக்களின் நலன் கருதி பெரிய படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து மிகக்குறைந்த விலையில் மீனவர்கள் ஊடாக பொதுமக்களுக்கு மீன்களை விநியோகித்தனர்.

அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுததிய படகுதான் அன்னைவேளாங்கன்னி படகாகும்.

குறித்த படகே புதுமாத்தளன் சாலை கடற்கரை ஓரம் அனாதரவாக கிடக்கின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

Comments

comments, Login your facebook to comment