625.368.560.350.160.300.053.800.560.160.90பொகவந்தலாவை இராணிகாடு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியை கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த இளைஞனின் தாய் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை கைதுசெய்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியையும் அவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமாவையும் காணவில்லை’ என்று சிறுமியின் பெற்றோர், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (01) முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த மாணவி, சம்பவ தினத்தன்று காலை 07.45 மணியளவில் முச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றதை சக மாணவியொருவர் கண்டுள்ளார்.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இளைஞனின் தாய் மற்றும் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.

எனினும், இளைஞன் மற்றும் மாணவியை பொலிஸார் தேடி வருவதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவி, பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்விக் கற்பதுடன் அவரது மாமா என்றுக் கூறப்படும் நபர் கண்டி கலகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment