businessman-goes_1திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் பண்டாரகமவைச் சேர்ந்த வர்த்தகரை தேடுவது தொடர்பான விசாரணைகளை திருகோணமலை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இதுவரையில் அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான குறித்த வர்த்தகர், வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க ஏல விற்பனையில், ஆபரணங்களை கொள்வனவு செய்வதற்காக திருகோணமலைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கந்தளாயில் விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், பின்னர் அவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவரது தந்தையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் தம்முடன் ஒரு கோடி ரூபாய் வரையான பணத்தொகையை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

businessman-goes

Comments

comments, Login your facebook to comment