பௌத்த மக்கள் வசிக்காத பகுதியில் புத்த சிலை வைக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல என்றும் இது அப்பகுதியில் வாழும் குறிப்பாக, இந்து மக்களை புண்படுத்தும் செயல் என்ற கருத்தும் அண்மை காலமாக பேசப்பட்டு வந்த ஒரு விடயம்.

யாழ்பாணம் போன்ற வட பகுதியில் புத்த சிலைகளை வைக்கும் நிலையில் தெற்கு பகுதியில் விகாரைக்குள் இந்து கோவில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுவது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விடயமாக காணப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் இந்த விகாரையில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் விஷேட பூஜைகளையும் மேற்கொள்ளுகின்றார்கள்.

இது மத நல்லிணக்கத்தை எடுத்து காட்டுகின்றதா? அல்லது மத ஆக்கிரமிப்புக்கு அடிவாரம் இடுகின்றதா? என்பதை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Comments

comments, Login your facebook to comment