உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நிகழ்சித்திட்டமொன்று வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளும் இந் நிகழ்ச்சித்திட்டத்தில் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல பெண்கள் கலந்து கொண்டிருந்ததுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராசா, வவுனியா வரியிறுப்பாளர் சங்க தலைவர் செ.சந்திரகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உள்ளூராட்சி சபைகளின் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

Comments

comments, Login your facebook to comment