625.368.560.350.160.300.053.800.560.160.90பெரியநீலாவணையில் வயோதிப பெண்ணொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெரியநீலாவணை ஸ்டார் வீதியில் வசித்து வந்த சீனித்தம்பி பாத்துமா (73வயது) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், அவரைத் தேடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், குறித்த வயோதிபப் பெண் பெரியநீலாவணை விஸ்ணு கோயில் வீதி 4வது ஒழுங்கையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment