யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சாரணியம் உருவாக்கப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வனப்பாசறை நிகழ்வு நேற்று மாலை வவுனிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வடக்கு மாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்புரையாற்றியுள்ளார்.

24688d670a740a078f4290c895cad0a8

இதில் உரையாற்றிய அமைச்சர்,

ஒரு காலப்பகுதியில் எங்களை வழிநடத்துவதற்காக ஒரு தேசிய தலைமை இருந்தது. இன்று அத்தகைய இராணுவ பலம் எங்களிடம் இல்லை.

இந்த சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேர்டன் பவுல் கூட ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து அதன் விளைவாக சாரணியத்தை உருவாக்கி இருக்கின்றார்.

ஆகவே சாரணிய மாணவர்களாகிய நீங்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோர்களும் மாணவர்களும் மனித உரிமை ஆணையகத்திற்கு செல்கின்ற ஒரு நிலையும் மாணவர்கள் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து வணங்கும் ஒரு சூழ்நிலையும் தற்போது உருவாகியுள்ளது.

நாங்கள் எமது பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆலய சந்நிதானம் இவற்றை தவிர வேறு எங்கும் விழுந்து வணங்கியது கிடையாது. ஆகவே கல்விச்சூழல் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் இருகின்றோம்.

இன்றைய சூழலில் கட்டுப்பாடு என்ற ஒன்று இல்லாத சூழலில் உங்களை கட்டுக்கோப்பாகவும் ஒரு ஒழுக்க சீலர்களாகவும் வளர்த்தெடுப்பதற்கு இந்த சாரணியம் கைகொடுக்கும் என தான் உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சாரணியத்தினுடைய இலட்சியமே தேசப்பற்று கொண்டவர்களாக நாட்டு பற்று மிக்கவர்களாக அதேநேரம் சமூகத்திற்கும் ஏனையவர்களிற்கும் உதவுபவர்களாக தங்களுடைய பிரஜைகளை நற்குண சீலர்களாக உருவாக்குவதற்கு இந்த சாரணிய இயக்கம் வலுச்சேர்க்கும் எனவும் அமைச்சர் ஐங்கரநேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment