பாரிய புதையல் ஒன்று கிடைத்தால் மட்டுமே நாட்டின் கடன் சுமையை குறைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2020இல் இந்த நாட்டின் கடன் சுமையை குறைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே பந்துல குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் காணப்படும் கடன்சுமையை குறைப்பதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடன் சுமையை குறைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் பொய்யானது என்றும், நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Comments

comments, Login your facebook to comment