இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில்  வெளிநாட்டாளர்கள் இலங்கையில்  குத்தகைக்குப் பெறும் காணிகளுக்கான   300 வீத வரியை  நீக்கிக்கொள்வதற்கான  மிகப்பெரியதொரு தீர்மானத்தை   நல்லாட்சி அரசாங்கம்  எடுக்கவுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கையர்களை திருமணம் முடிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கை பிரஜைகள் அந்தஸ்தை வழங்குவதற்கும்  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி, குத்தகைக்  கொள்வனவின் போது விதிக்கப்படும் 300 வீத  வரி அறவீட்டை நீக்கும் நோக்கில்   அரசாங்கம்   காணி சட்டத்தில் திருத்தங்களை செய்யவுள்ளதாக    காணி அமைச்சின்  அதிகாரியொருவர்  தெரிவித்திருக்கிறார்.    வெளிநாட்டு  முதலீடுகளை  விரைவாக அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக  அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பில்  வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி  விரைவில் தீர்மானம் எடுக்கப்படுமென  தெரிவிக்கப்படுகிறது.

Comments

comments, Login your facebook to comment