மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Capture5

புதியகாத்தான்குடி , பைஷல் வீதியைச் சேர்ந்த முஹம்மது பாறூக் ஹயாஸ் அப்கர் (வயது 19) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இவர் காத்தான்குடியில் பாதணிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் தனது இரவு நேரக் கடமையை முடித்து விட்டு வெளியேறி மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் செல்லும்போது இவர் பயணித்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவில் உள்ள இரும்புக் கம்பியில் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமுற்ற இளைஞன் பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் காயமுற்ற இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொது வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Capture

Comments

comments, Login your facebook to comment