திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஒருவர்தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட்ட ஐந்துபேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாகிரிய என்ற இடத்தில் நெல் திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர்; இரண்டு பேருடன் 20வயதான இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

எனினும் செப்டம்பர் 5ம் திகதி முதல் அவரைக்காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் காணாமல் போனதாக கூறப்படும் சந்தேகநபர், தடுப்பில் இருந்துதப்பிச்சென்று விட்டதாக பொலிஸார், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இளைஞர் காணாமல் போனமைக்கு பொலிஸாரே காரணம் என்றும்கைதுசெய்த போதே பொலிஸார் இளைஞர் மீது கடும் தாக்குதலை நடத்தியதாகவும் குடும்பத்தினர்முறையிட்டுள்ளனர்.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Comments

comments, Login your facebook to comment