படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத பிரேமசந்திரவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத பிரேமசந்திர மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, அவரது மகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவினால் இன்றைய தினம் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்துடன் பதிவொன்றையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

குறித்த பதிவில்,

Capture

“இந்த புகைப்படத்தின் ஊடாக தங்கள் ஒருவரினதும் அனுதாபத்தை பெற நினைக்கவில்லை. எனது வாழ்வில் முதல் முறையான நான் இந்த புகைப்படத்தை வெளியிடுகின்றேன். எனது நீதியை வெளிப்படுத்தவே முயற்சிக்கின்றேன். தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட ஒருவரினால் உயிருடன் வாழ முடியாதென்பதனை கூறுவதற்காகவே நான் இந்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற செய்தேன். இதனால் தவறான வைத்திய தகவல்களை நீதிமன்றில் வெளியிட்ட வைத்தியர் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். எப்படியிருப்பினும் என்னால் இந்த சம்பத்தை இன்றும் கூட நினைத்து பார்க்க முடியவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Comments

comments, Login your facebook to comment