625.368.560.350.160.300.053.800.560.160.90யாழ். குடாநாட்டில் போர்க்காலத்தில் காணப்பட்ட அச்ச நிலையை விட சமூக சீர்கேடுகள் நிகழ்கின்ற இன்றைய கால கட்டத்தில் அச்சமும் பீதியும் அதிகம் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது.

எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழ் சமூகம்.

எனினும் இதற்கு தடையாக தலைதூக்கும் விடயம்தான் இந்த மது பாவனை உட்பத்தி. மதுபான விற்பனையில் யாழ்ப்பாண மாவட்டம் முன்னிலையில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏன் என்று கொஞ்சம் சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால் இதற்கு பதில் நிச்சயம் கிடைக்கும்.

யாழ்பாணத்தில் மட்டும்தான் இப்படியா? இல்லை நிச்சயம் இல்லை…

ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதனை நாங்கள் வெளிப்படையாக கண்டுகொண்டிருக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடைபெறுவதில்லை. கொழும்பில் இதனை விடவும் அதிக சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஏன் உலகளாவிய ரீதியிலும் கூட இப்பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது. ஆனால் யாழில் ஒரு சிறு விடயம் ஏற்படுகின்ற போது அதனை விசுவரூபமாக பிரசாரப்படுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் இதனை குறைப்பது எப்படி என்று என்பதைதான் நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இது தான் அதற்கான தருணம்.

தமிழ் கலாச்சாரத்தை தட்டிக்கொடுத்த பெருமைக்குரிய யாழ்பாணத்தை சூழ்ந்த இந்த பிரச்சிணைக்கு கேள்வி, பதில், வினா, எல்லாமே நாம் தான்.. சற்று சிந்திப்போம் ஏன் இந்த நிலை..

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழா, யாழ்புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் திறப்பு விழா ஆகிய வைபவங்களில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இவற்றில் முதல் நிகழ்வாக போதையிலிருந்து விடுப்பட்ட நாடு எனும் கருப்பொருளில் மது மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிக்கும் நாடளாவிய திட்டத்தின் எட்டாவது நிகழ்வை ஜனாதிபதி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்தார்.

யாழ் பொலிஸ் நிலையத்தின் ஆதிக்க எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில்குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த அழைப்பையேற்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் யாழ்மாவட்ட நீதவான் சதீஸ்கரன், யாழ் மாவட்ட சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். பொலிஸ் நிலையத் திறப்பு விழாவின் தேநீர் இடைவேளையின்போது, இந்த நீதிபதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

சுமார் பதினைந்து நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போதே யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகம் உள்ளிட்டகுற்றச்செயல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார். இந்த உறுதி மொழியை எப்படி நிறைவேற்ற போகின்றார்? இதற்கு மக்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்படும்.

இது யாழில் மட்டும் அல்ல முழு நாட்டிலும் அழிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். நாளைய தலைமுறை நிச்சயம் புதியதாய் உருவாகும்.

Comments

comments, Login your facebook to comment