அவசரமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு மத்திய நிலையங்களைத் தேடுதல், சோதனைக்கு உட்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைத் தவணை நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகள் தொடர்பிலும் கணக்கெடுக்கப்பட்டு, அதிகாரிகளின் பட்டியலையும் தயாரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுன்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவற்றில் ஒன்றை நடத்துவதற்கே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இவற்றில் ஒன்றுக்கே முகங்கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment