ஆதிவாசிகள் மற்றும் வீதியில் வசிக்கும் மக்களுக்கும் வாக்குரிமையை பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வஜன வாக்குரிமை குறித்து மக்களுக்கு தெளிவூட்டுவதற்காக “வாக்கு உங்கள் உரிமை” எனும் தொனிப் பொருளின் கீழ் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

உலக ஜனநாயக தின நிகழ்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

குறித்த நிகழ்வில் இது தொடர்பான விஷேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.

Comments

comments, Login your facebook to comment