5-7

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகள், போதைப்பொருள் அடிமைகள் மற்றும் பணத்திற்கு கூச்சலிடுபவர்களினால் நாளை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

கொலன்னாவை நகரசபையின் முன்னாள் துணை மேயர் சுரேஷ் கோதாகொடவின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என்பது சுரேஷ் கோதாகொடவுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment