பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக அவரது முன்னாள் காதலியான அனர்கலி ஆகர்ஷா தாம் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

anarkali-2-8தனக்கு நெருக்கமான இலங்கையில் உள்ள பிரபல நடிகை ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனர்கலி இதனை தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் அனர்கலி வெளிநாடு ஒன்றில் குடியேறியுள்ளார்.

துமிந்த சில்வா தனக்கு செய்த தவறுக்கான கடவுளின் சாபத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவும் அனர்கலியும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தனர்.

பின்னர் இருவருக்கும் இடையில் பெரும் பகை உருவானது.

துமிந்த சில்வா தன்னை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அனர்கலி குற்றம் சுமத்தியிருந்தார்.

Comments

comments, Login your facebook to comment