18060அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நிலையில்  வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13) இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 83 வயதானவரெனவும், இவர் கடந்த 8 ஆம் திகதி  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபர் அம்பலாந்தோட்ட பகுதியில் உள்ள  முதியோர் இல்லத்தில் உள்ளவர் எனவும், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால் சிகிச்சைப்பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment