625.368.560.350.160.300.053.800.560.160.90இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா பணத்தை அபகரித்ததாக பொலிஸ் உத்தியோகத்தாகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் விற்பனை செய்து பெற்றுக்கொண்ட ஒரு கோடி ரூபா பணத்தை, பலவந்தமான முறையில் வர்த்தகர்கள் இவ்வாறு பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் முறைப்பாடு குறித்து பொலிஸ் தலைமயகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

2013ம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் பொலிஸ் உத்தியோகத்தா்கள் ஒரு கோடி ரூபா பணத்தை அபகரித்துள்ளளனர்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய மூன்று பேரே இவ்வாறு பணம் அபகரித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளியின் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment