625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை ( 14 ) காலை கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பத்தகராறு காரணமாகவே கணவன் மனைவியின் வாய்ப் பகுதியில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் சண்டையை தடுப்பதற்காகச் சென்ற மகளின் கையில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவனைக் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment