625.368.560.350.160.300.053.800.560.160.90அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதோடு, இவர்கள்பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 352 தேசிய பாடசாலைகள் இருக்கின்ற போதும் அரச வைத்தியர்கள் கொழும்பு ரோயல் கல்லூரி, ஆனந்தா, விசாகா, கண்டி தர்மராஜ , கிங்ஸ்வூட், மஹாமாயா, குருநாகல் மலியதேவா, பாலிக, உள்ளிட்ட 12 பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு அனுமதி கோரி நிற்பதாகவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இவர்களது கோரிக்கை நியாயமற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரச வைத்தியர்கள்  வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment