20160421_120518நாட்டிலுள்ள பிரபலமான பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு கல்வி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பல பெற்றோர் எண்ணுகின்றனர்.

நேற்றையதினம் கூட அரச வைத்தியர்கள் தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி கோரி கல்வி அமைச்சில் அத்துமீறி உள்நுழைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில் மாத்தளை பிரதேசத்தில் 6 மாணவர்களும் 4 ஆசிரியர்களுடன் இயங்கும் பாடசாலை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.

மாத்தளை-நாவுல-தெமதஓய பிரதேசத்தில் குறித்த பாடசாலை அமைந்துள்ளது.

அதிக மக்கள் வாழும் குறித்த பிரதேசத்தில் இந்த பாடசாலையில் 6 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்று வருவதாகவும், இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என இந்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதினை கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு முதலாந்தரத்திற்காக இதுவரை ஒரு விண்ணப்பம் கூட இந்த பாடசாலைக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment