625.368.560.350.160.300.053.800.560.160.90வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்று ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொழிலாளர்களர் சிலர் கிணறு ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிணற்றுக்குள் 200க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மீட்கப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு துருப்பிடித்து காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment