625.368.560.350.160.300.053.800.560.160.90யாழ்ப்பாண சிறைச்சாலையில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற நபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். சிறைச்சாலையில் சிறைவாசம் மேற்கொள்ளும் கைதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்கள் தடையின்றி சிறைச்சாலையிலும் போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருட்கள் இனந்தெரியாத நபர்கள் மூலமாக சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து வீசப்படுவதாகவும், இவற்றினை சிறைக்கைதிகள் இரகசியமாக வைத்துக் கொள்வதாகவும், அதன் காரணமாக அவர்கள் சிக்குவதில்லை எனவும் விடுதலை பெற்ற கைதிகள் கூட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சிறைச்சாலைக்குள்ளே தொலைபேசிகள் பாவிக்கப்படுவதாகவும், இதன் மூலமாகவே போதைப் பொருள் பணப்பரிமாற்றங்கள் இடம் பெறுகின்றது.

போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் போதையில் அடிக்கடி சிறைக்கூடங்களில் கைதிகளுக்கிடையில் சண்டைகளும் ஏற்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் கவனக் குறைவாக இருப்பதாகவும் யாழ். சிறையில் இருந்து விடுதலையான கைதிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் யாழ். சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளபோதும் கைதிகளுக்கிடையே போதைப்பொருள் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாகவும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment