625.368.560.350.160.300.053.800.560.160.90விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், இன்றைய தினம் முன்னாள் போராளிகள் எவரும் மருத்துவ பரிசோதனைக்காக வருகைத்தரவில்லை என தெரியவந்துள்ளது.

முன்னாள் போராளிகளக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் வைத்தியசாலையில் நான்கு முன்னாள் போராளிகளும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் 25 முன்னாள் போராளிகளும் மருத்துவப் பரிசோதனைக்காக வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் முன்னாள் போராகளிகளை புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து மருத்துவ பரிசோதனைகளை முன்னாள் போராளிகள் தவிர்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment