625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மன்னார் மடு வலயத்திற்குட்பட்ட மன்/பெரிய பண்டி விரிச்சான் மகா வித்தியாலயத்தில் யுத்தத்தின் பாதிப்புக்குள்ளான இரண்டு கட்டிடங்கள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளன.

இது இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இப்பாடசாலையில் இருக்கும் போது நடந்து முடிந்த கொடூரமான யுத்தத்தின் பாதிப்பை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது.

இதனால் மாணவர்கள் மத்தியில் இவ்விடயம் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது, இக் கட்டிடத்தை அகற்ற மடு வலய கல்வி பணிமணை ஊடாக வட மாகாண கல்வி அமைச்சிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

 எனவே, மாணவர்களின் மன நிலையை கருத்திற்கொண்டு கட்டிடங்களை அகற்றுவதற்குரிய அனுமதியை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்கு பதிலாக புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு பரிந்துரை செய்யுமாறும் பாடசாலை நிர்வாகம் மற்றும் பெரிய பண்டி விரிச்சான் மக்கள் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment