625.368.560.350.160.300.053.800.560.160.90 (4)சிறுவன் ஒருவரை கடத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருந்த அரசாங்க தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட, தொலை தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பொது பணிப்பாளர் அனுஷா பெல்பிட்ட உள்ளிட்ட 10 பேர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்காக தனது மகனை கடத்திவிட்டார்கள் என குறித்த சிறுவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.

மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு சாதகமான முறையில் காணொளி ஒன்றைத் தயாரிப்பதற்காகவே சிறுவன் கடத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனை 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி தன் கணவர் மீட்டு வந்தார் என்றும், டிசம்பர் 30 ஆம் திகதி தன் மகனை தொலைக்காட்சியில் தான் பார்த்ததாகவும் சிறுவனின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த காணொளி தயாரிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவினரால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment