625.368.560.350.160.300.053.800.560.160.90 (3)நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணக் கொள்ளைச் சம்பவத்தினை வழிநடத்தியவர் ஒர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொழும்பு நகரில் அமைந்துள்ள தங்க நகையகம் ஒன்றில் அண்மையில் சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான மூன்று கிலோ கிராம் எடையுடைய தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் அதிகாரிகள் என்ற போர்வையில் நகையகத்திற்குள் பிரவேசித்த நபர்கள் இந்தக் கௌ்ளையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பொறுப்பதிகாரி மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலையமொன்றில் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் இவர் கடமையாற்றி வருகின்றார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரண்டு பேர் கொண்ட கொள்ளையர் கும்பலொன்று நகையகத்தை சூறையாடியிருந்தது. நான்கு மாடிகளைக் கொண்ட நகையகத்தின் நகை உற்பத்தி மேற்கொள்ளப்படும் இரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்களின் கைகளைக் கட்டி தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீதியில் காணப்பட்ட சீ.சீ.ரி.வி கமரா மூலம் கொள்ளையர்களில் ஒருவரான பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட கொள்ளையர்களை கைது செய்யவும் தங்க ஆபரணங்ளை மீட்கவும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட கொள்ளையர்கள் பயணம் செய்த மோட்டார் வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த கொள்ளையர்களில் மற்றுமொருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments, Login your facebook to comment