324மாத்­தளை அம்­ப­க­ஹ­முல பஸ் நிலைய பொது மல­ச­ல கூ­டத்தில் கைத்­தொ­லை­பேசி மூலம் பண பரிமாற்று முறையில் ஹெரோயின் போதைப் பொருளை பெற்றுக் கொண்ட மூவரை மாத்­தளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைத்­தொ­லை­பேசி முறையில் பண மாற்றம் செய்துகொண்ட பின்னர் ஹெரோ யின் போதைப் பொருள் பக்கெட்­டுகள் பொது மல­சல கூடத்தில் பல்­வேறு இடங்­களில் சுவிங்­கத்தின் உத­வி­யுடன் ஒட்­டப்­பி­டி­ருக்கும்.

இதனை போதைப் பொருள் பாவ­னை­யா­ளர்கள் இல­கு­வாக பெற்றுக் கொண்டு வந்­து­ளள்­மையும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது. பொலி­ஸா­ருக்குக் கிடைக்கப்பெற்ற தக­வ­லை­ய­டுத்து பொலிஸார் பொது மல­ச­ல ­கூ­டத்தில் திடீர் சோதனை மேற்­கொண்டு இவ்­வாறு ஹெரோயின் போதைப் பொருளை பெற்றுக் கொண்ட மூவரை கைது செய்­த­துடன் அவர்­க­ளி­ட­ மி­ருந்து 120 மில்லி கிராம் ஹெரோ­யி­னையும் கைப்­பற்றி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போதே மேற்­படி தக­வல்கள் தெரி­ய­வந்­துள்­ளன என பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட மூவரும் கண்டி வத்துகாமம் இரத்தோட்டை பிர தேசங் களைச் சேர்நதவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Comments

comments, Login your facebook to comment